/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தாம்பரத்தில் 176 மாடுகள் பிடிப்பு
/
தாம்பரத்தில் 176 மாடுகள் பிடிப்பு
ADDED : நவ 26, 2024 02:31 AM
தாம்பரம், தாம்பரத்தில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில், சுற்றித்திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களிலும், அக்., 23 முதல் நவ., 24 வரை, 176 மாடுகள் பிடிக்கப்பட்டன. இவற்றில், 66 மாடுகளின் உரிமையாளர்களிடம், 1.32 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
மீதமுள்ள, 110 மாடுகள், செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துாரை அடுத்த கொண்டமங்கலம் ஊராட்சி கோசாலையில் அடைக்கப்பட்டுள்ளன. மாடுகளை திரும்ப பெற, அதன் உரிமையாளர்கள் நாள் ஒன்றுக்கு, 2,250 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.