/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பேரமனுாரில் 190 கிலோ குட்கா பறிமுதல்
/
பேரமனுாரில் 190 கிலோ குட்கா பறிமுதல்
ADDED : நவ 12, 2024 08:31 PM
மறைமலை நகர்:மறைமலை நகர் அடுத்த பேரமனுார் பகுதியில் உள்ள மளிகை கடையில், குட்கா விற்பனை நடைபெறுவதாக, கூடுவாஞ்சேரி சரக உதவி கமிஷனரின் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பேரமனுார் கட்டபொம்மன் தெருவில் உள்ள மீனாட்சிசுந்தரம் என்பவரின் மளிகை கடையில், போலீசார் சோதனை நடத்தியபோது, பண்டல் பண்டலாக தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை போலீசார் கண்டுபிடித்தனர்.
மேலும், அதே பகுதியில், சந்திரபோஸ் தெருவில் உள்ள மீனாட்சிசுந்தரம் வீட்டிலும் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த, 190 கிலோ குட்கா பொருட்களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
மீனாட்சி சுந்தரத்தை கைது செய்து, போலீசார் நடத்திய விசாரணையில், பூந்தமல்லி மற்றும் தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பகுதியில், ரகசியமாக செயல்பட்டு வரும் குட்கா குடோன்களில் இருந்து, ஒருவர் எடுத்து வந்து கொடுத்தது தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.