/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புத்தாண்டில் விதிமீறல்கள் 1,963 வழக்குகள் பதிவு
/
புத்தாண்டில் விதிமீறல்கள் 1,963 வழக்குகள் பதிவு
ADDED : ஜன 03, 2024 09:45 PM
செங்கல்பட்டு:புத்தாண்டில் விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டிய, 1963 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 716 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என, எஸ்.பி., சாய் பிரணீத் தெரிவித்தார்.
இது குறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணீத் அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டத்தில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, டிச., 24ம் தேதி முதல், கடந்த 2ம் தேதி வரை, கிழக்கு கடற்கரை சாலை, ஓ.எம்.ஆர்., சாலை தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட இடங்களில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து முக்கிய சாலை சந்திப்புகளிலும், வாகன தணிக்கை செய்யப்பட்டது. இதில், ஆவணம் சரியாக இல்லாத வாகன உரிமையாளர்கள் 827 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாகனத்தில் பதிவெண் பலகை தவறாக உள்ள வாகன உரிமையளார்கள் 592 பேர் மீதும், வாகனத்தில் மறுவடிவமைக்கப்பட்ட 'சைலன்சர்'கள் உள்ள வாகனங்களின் உரிமையாளர்கள் 73 பேர் மீதும் வழக்கு பாய்ந்தது.
அதிகவேமாக இயக்கிய வாகன உரிமையாளர்கள் 401 பேர், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 70 பேர் என, மொத்தம் 1,963 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில், 716 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.