/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
17 வயது திருநங்கை கொலை வழக்கில் 2 இன்ஸ்., குற்றவாளிகளாக சேர்ப்பு
/
17 வயது திருநங்கை கொலை வழக்கில் 2 இன்ஸ்., குற்றவாளிகளாக சேர்ப்பு
17 வயது திருநங்கை கொலை வழக்கில் 2 இன்ஸ்., குற்றவாளிகளாக சேர்ப்பு
17 வயது திருநங்கை கொலை வழக்கில் 2 இன்ஸ்., குற்றவாளிகளாக சேர்ப்பு
ADDED : ஜன 30, 2024 11:12 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே, 17 வயது திருநங்கையை கொலை செய்த வழக்கில், முறையாக விசாரணை நடத்தாத இன்ஸ்பெக்டர்கள் இருவரை குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்து, பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நண்பர்கள்
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார், கிளாய் கிராமத்தில், கடந்த செப்., 2017ல், இளைஞர் ஒருவரின் சடலத்தை எரிந்த நிலையில் போலீசார் மீட்டனர். கிளாய் பாரதியார் நகரைச் சேர்ந்த கார்த்திக், 25, என்பவர், நண்பர்களுடன் சேர்ந்து சின்னராஜி என்ற திருநங்கையை கொலை செய்ததாக கிளாய் கிராம நிர்வாக அலுவலர் சிவகுமார் என்பவரிடம் சரணடைந்தார்.
கார்த்திக் அளித்த வாக்குமூலம்:
சின்னராஜி என்ற திருநங்கையை அழைத்துக் கொண்டு ஏரிக்கரை செல்லும்போது, நண்பர்கள் சத்யா, 25, பாலு, 26, ஆகியோர் உடன் வந்தனர். அப்போது, வலுக்கட்டாயமாக திருநங்கையுடன் பாலியல் உறவில் ஈடுபட்டோம்.
விசாரணை அதிகாரி
எதிர்ப்பு தெரிவித்த திருநங்கையின் கழுத்தை அறுத்து கொலை செய்தோம். உடலை எரித்து குப்பை மேட்டில் வீசினோம்.
இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக காவல் ஆய்வாளர் நடராஜன், அவரைத் தொடர்ந்து விநாயகம் ஆகியோர் செயல்பட்டனர்.
போக்சோ
ஸ்ரீபெரும்புதுார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அங்கிருந்து காஞ்சிபுரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தற்கு வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
இவ்வழக்கை விசாரித்த, மாவட்ட நீதிபதி செம்மல், இவ்வழக்கை செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டார்.
மேலும், 'கொலை செய்யப்பட்ட நபர் 17 வயது சிறார். அவரின் ஜாதி விபரங்களை போலீசார் சரி பார்க்கவில்லை. எனவே, இவ்வழக்கை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க முடியாது.
இறந்த நபர் எஸ்.சி., என்பதால், இவ்வழக்கில் அந்த பிரிவுகளையும் சேர்க்கவில்லை' என அதிருப்தி தெரிவித்தார்.
மேலும், விசாரணை முறையாக நடத்தாத காவல் ஆய்வாளர்கள் நடராஜன் மற்றும் விநாயகம் ஆகிய இருவரையும், குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்து இருவருக்கும் பிடிவாரன்ட் பிறப்பித்து நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.