/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மின் கம்பி அறுந்து விழுந்து 2 பசுக்கள் உயிரிழப்பு
/
மின் கம்பி அறுந்து விழுந்து 2 பசுக்கள் உயிரிழப்பு
ADDED : ஆக 19, 2025 12:23 AM
ஸ்ரீபெரும்புதுார், படப்பை அருகே, கன மழையின் போது, வெவ்வேறு இரண்டு இடங்களில் மின் கம்பி அறுந்து விழுந்து, இரண்டு பசு மாடுகள் உயிரிழந்தன.
படப்பை, ஒரகடம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கன மழை பெய்தது.
இதில், ஆரம்பாக்கம் கிராமம், பிள்ளையார் கோவில் தெருவில் மின் கம்பி, அறுந்து விழுந்தது.அப்போது, கண்ணப்பன் என்பவருக்கு சொந்தமான பசு மாடு மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது.
அதேபோல, கூழாங்கல்சேரி களத்து மேட்டு தெருவில், மழையில் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்த பசு மாடு உயிரிழந்தது.மேலும், அப்பகுதி முழுதும், மாலை 3:00 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், அப்பகுதி மக்கள் அவதி அடைந்தனர்.