/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கர்ப்பமாக்கிய சிறுவன் உட்பட 2 பேர் கைது
/
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கர்ப்பமாக்கிய சிறுவன் உட்பட 2 பேர் கைது
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கர்ப்பமாக்கிய சிறுவன் உட்பட 2 பேர் கைது
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கர்ப்பமாக்கிய சிறுவன் உட்பட 2 பேர் கைது
ADDED : டிச 30, 2025 04:35 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், பள்ளிக்கரணை துணை காவல் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமம் ஒன்றில் வசித்து வரும், 45 வயது பெண்ணுக்கு, 23 வயதில் மகனும், 21 வயதில் மனநலம் பாதிக்கப்பட்ட மகளும் உள்ளனர்.
மகனுடன் அப்பெண் தினமும் வேலைக்குச் சென்ற நிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட அவரது மகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.இந்நிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண் நேற்று முன்தினம் வாந்திஎடுத்துள்ளார்.
இதனால் அவரது தாய், தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
அங்கு, மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது, அப்பெண் கர்ப்பமாக இருப்பது தெரிந்துள்ளது. இதுகுறித்து அப்பெண்ணின் தாய், கேளம்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் போலீசார் விசாரித்த போது, சில தகவல்களை கூறியுள்ளார்.
அதன்படி, அவரது வீட்டிற்கு அருகே வசித்து வரும், 17 வயது சிறுவனையும், சக்திவேல், 22, என்ற நபரையும் பிடித்து விசாரித்தனர்.
அவர்கள், தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று, அவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக, போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதையடுத்து, போலீசார் சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவனையும், சக்திவேலையும் நேற்று கைது செய்தனர்.

