/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வண்டலுார் பூங்காவில் 2 சாம்பார் மான் இறப்பு
/
வண்டலுார் பூங்காவில் 2 சாம்பார் மான் இறப்பு
ADDED : செப் 27, 2024 12:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம்:வண்டலுார் உயிரியல் பூங்காவில், மான் மற்றும் லயன் சபாரி பயன்பாட்டில் உள்ளது. பார்வையாளர்கள், பாதுகாக்கப்பட்ட வாகனத்தில் ஏறி, முதலில் மான் சபாரிக்கு சென்று, மான்களை அருகே பார்த்து ரசிப்பர். பின், லயன் சபாரிக்கு அழைத்துச் செல்லப்படுவர்.
மான் சபாரி உள்ள இடத்தில், நுாற்றுக்கணக்கான சாம்பார் மான்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அங்குள்ள மான்களில் இரண்டு, நேற்று இறந்தன.
பூங்கா நிர்வாகம், அவற்றின் உடல்களை பிரேத பரிசோதனை செய்து, அடக்கம் செய்தது. மான்கள் எப்படி இறந்தன என்பது குறித்து, பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவிக்கவில்லை.