ADDED : செப் 26, 2024 10:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த பொன்மார் சுற்றுவட்டார பகுதிகளில், லாரிகள் வாயிலாக எடுக்கப்படும் கழிவுநீர், பொன்மார் பகுதிகளில் கொட்டப்படுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, தாம்பரம் கமிஷனரகம் உத்தரவின்படி, தாழம்பூர் போலீசார் மேற்கண்ட பகுதிகளில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தநிலையில், நேற்று முன்தினம், பொன்மார் ஏரி மற்றும் விளையாட்டு மைதானம் அருகே கழிவுநீர் லாரிகள், கழிவு நீரை திறந்து விடுவது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் இரண்டு கழிவுநீர் லாரிகளை பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.