/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கடைகளில் திருட்டு 2 வாலிபர்கள் கைது
/
கடைகளில் திருட்டு 2 வாலிபர்கள் கைது
ADDED : செப் 21, 2024 10:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த கோவளத்தில், சில நாட்களுக்கு முன் இ.சி.ஆர்., சாலையில் உள்ள மளிகை கடையின் பூட்டை உடைத்து, 10,000 ரூபாய் திருடுபோனது.
அதேபோல், கேளம்பாக்கம் மஜீத் நகரில் உள்ள பெட்டிக்கடையின் பூட்டை உடைத்து, 1,000 ரூபாய் திருடப்பட்டது. இதுதொடர்பாக, கேளம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.
விசாரணையில், கண்ணகி நகரை சேர்ந்த பிரதீப்ராஜ், 24, பொற்செல்வன், 19, ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், மூன்று இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.