/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சூணாம்பேடு அருகே மின்கம்பத்தில் மோதி வயலில் கவிழ்ந்த டவுன் பஸ் பயணியர் 20 பேர் காயம்

ADDED : டிச 06, 2025 06:03 AM

செய்யூர்: வன்னியநல்லுார் கிராமத்தில், அரசு பேருந்து வயலுக்குள் கவிழ்ந்த விபத்தில், 20 பேர் காயமடைந்தனர்.
சூணாம்பேடில் இருந்து அச்சிறுபாக்கம் நோக்கி, நேற்று மதியம் 12:40 மணியளவில், தடம் எண் 'டி21' டவுன் பேருந்து, 25 பயணியருடன் புறப்பட்டது.
பேருந்தில் துரை, 45, என்பவர் ஓட்டுநராகவும், ராஜேந்திரன், 48, என்பவர் நடத்துநராகவும் பணியில் இருந்தனர்.
12:55 மணியளவில், சூணாம்பேடு அடுத்த வன்னியநல்லுார் காட்டுப்பாலம் அருகே பேருந்து சென்ற போது, ஓட்டுநரின் கவனக்குறைவால், சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது மோதி, நெல் பயிரிடப்பட்டுள்ள வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், பயணியர் 20 பேர் காயமடைந்தனர். இவர்களுக்கு, சூணாம்பேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் 11 பேர், மேல் சிகிச்சைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பேருந்து மின்கம்பத்தின் மீது மோதிய போது, மின்கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசியதால், மின்மாற்றியில் பழுது ஏற்பட்டு, மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து, சூணாம்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.