/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பெரும்பாக்கத்தில் குடிநீர் தட்டுப்பாடு புதிய கிணறு அமைக்க கோரிக்கை
/
பெரும்பாக்கத்தில் குடிநீர் தட்டுப்பாடு புதிய கிணறு அமைக்க கோரிக்கை
பெரும்பாக்கத்தில் குடிநீர் தட்டுப்பாடு புதிய கிணறு அமைக்க கோரிக்கை
பெரும்பாக்கத்தில் குடிநீர் தட்டுப்பாடு புதிய கிணறு அமைக்க கோரிக்கை
ADDED : டிச 06, 2025 06:03 AM

மதுராந்தகம்: அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரும்பாக்கம் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால், புதிதாக குடிநீர் கிணறு அமைக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அச்சிறுபாக்கம் ஒன்றியம், பெரும்பாக்கம் காலனி பகுதியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இவர்களின் குடிநீர் தேவைக்காக, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன், பெரும்பாக்கம் ஏரிக்கரை அருகே குடிநீர் கிணறு தோண்டப்பட்டு, அதற்கு சுற்றுச்சுவரும் அமைக்கப் பட்டது.
இந்த கிணற்றிலிருந்து மின்மோட்டார் மூலமாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, குழாய்கள் மூலமாக மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
கடந்த 2024ல் பெய்த கனமழை காரணமாக ஏரியில் நீர் நிரம்பியதால், சுற்றுச்சுவர் இடிந்து குடிநீர் கிணற்றுக்குள் விழுந்து மூடியது.
இதனால், பெரும்பாக்கம் காலனி பகுதிக்கு குடிநீர் வினியோகம் தடைபட்டது.
உடனே, பெரும்பாக்கம் ஏரிக்குள் உள்ள மற்றொரு குடிநீர் கிணற்றில் இருந்து, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது பெய்த மழைக்கு ஏரி நிரம்பி, இந்த குடிநீர் கிணற்றிலும் ஏரி நீர் கலந்து அசுத்தமாகி உள்ளது. இதனால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மாசடைந்த இந்த தண்ணீரை குடித்தால், தொற்று நோய் பரவ வாய்ப்புள்ளது.
பெரும்பாக்கத்தில் புதிதாக கிணறு அமைத்து, குடிநீர் வினியோகம் செய்ய வேண்டுமென, அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம், பலமுறை கிராம மக்கள் மனு அளித்துள்ளனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, பெரும்பாக்கத்தில் புதிய குடிநீர் கிணறு அமைக்க, கலெக்டர் சினேகா உரிய நடவடிக்கை எடுக்க வே ண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

