/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கோவளம் கடற்கரையில் இறந்து ஒதுங்கிய 20 கடல் ஆமைகள்
/
கோவளம் கடற்கரையில் இறந்து ஒதுங்கிய 20 கடல் ஆமைகள்
ADDED : ஜன 26, 2025 01:25 AM

திருப்போரூர்:சென்னை அருகே கடலோரங்களில், ஏராளமான 'ஆலிவ் ரிட்லி' கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்குகின்றன.
அந்த வகையில் கோவளம் கடற்கரையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 20 க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின.
இறந்து கிடந்த ஆமைகளை கடலோர பாதுகாப்பு பணியில் ஈடுபடும் சமூக ஆர்வலர்கள் கடற்கரை மணலில் புதைத்தனர்.
ஆண்டு தோறும் நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை ஆமைகளின் இனப்பெருக்க காலம் ஆகும்.
இந்த இடைப்பட்ட மாதங்களில் கடலின் ஆழத்தில் வசிக்கும் ஆமைகள் முட்டைகளை இடுவதற்காக திசை மாறிசெல்கின்றன.
மேலும், கடற்கரைக்கு வந்து குழி தோண்டி முட்டைகளை இட்டு விட்டு கடலுக்கு திரும்புகின்றன.
இவ்வாறு செல்லும் ஆமைகள் படகுகளில் மோதியும், வலைகளில் சிக்கியும் உயிரிழப்பதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து ஆமைகள் இறந்து வருவது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.