/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கொடூர் கொள்முதல் நிலையம் 2,000 நெல் மூட்டைகள் நாசம்
/
கொடூர் கொள்முதல் நிலையம் 2,000 நெல் மூட்டைகள் நாசம்
கொடூர் கொள்முதல் நிலையம் 2,000 நெல் மூட்டைகள் நாசம்
கொடூர் கொள்முதல் நிலையம் 2,000 நெல் மூட்டைகள் நாசம்
ADDED : ஜூன் 30, 2025 01:20 AM

செய்யூர்:கொடூர் நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட, 2,000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள், பராமரிப்பின்றி வீணாகி உள்ளன.
செய்யூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், 30,000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் உள்ளன.
அதிகப்படியாக சம்பா பருவத்தில் நெல் மற்றும் மணிலா விவசாயம் செய்யப்படுகிறது.
சம்பா பருவத்தில் அக்., நவ., டிச., மாதத்தில் பயிரிடப்பட்ட நெல் விளைந்து, தற்போது அறுவடை செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய, செய்யூர் மற்றும் மதுராந்தகம் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 86 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு செயல்படுகின்றன.
அந்த வகையில், செய்யூர் அடுத்த கொடூர் ஊராட்சியில், ஆட்சிவிளாகம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படுகிறது. தற்போது, இங்கு கொள்முதல் செய்து இருப்பு வைக்கப்பட்டு இருந்த, 2,000த்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள், முறையான பாதுகாப்பின்றி இருந்தன. இவை மழையில் நனைந்ததால், நாளடைவில் முளைப்பு ஏற்பட்டு, தற்போது நாற்று வளரத் துவங்கி உள்ளது.
மேலும், கோணிப் பைகள் மட்கிப் போனதால், மூட்டைகள் கிழிந்து, நெல் கீழே கொட்டி வீணாகி வருகிறது.
இந்த நெல்லை, கால்நடைகள் உண்டு வருகின்றன.
எனவே, நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் ஆய்வு செய்து, கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை, உடனுக்குடன் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த ஆண்டு பல இடங்களில் நெல் கொள்முதல் நிலையத்தில், முறையான பாதுகாப்பின்றி நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசமாகின.
இதனால், அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
@block_B
subboxhd@கோடிக்கணக்கான ரூபாய் இழப்புவிவசாயிகள் கூறியதாவது:எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு நெல் கொள்முதல் நிலையங்களில் பராமரிப்பின்றி, நெல்மூட்டைகள் வீணாகி உள்ளன.பெரும்பாலான கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடம் இருந்து மூட்டைக்கு 50 முதல் 80 ரூபாய் வரை, பணம் வசூல் செய்யப்படுகிறது. இதுகுறித்து எந்த அதிகாரிகளும் கண்டுகொள்வது இல்லை.பணம் வசூல் செய்வதை மட்டுமே நோக்கமாக வைத்து கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. கொள்முதல் செய்த நெல்லை பாதுகாப்பதில், அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர்.கொள்முதல் நிலையங்களில் பராமரிப்பின்றி வீணாகும் நெல் மூட்டைகளுக்கு, யார் பொறுப்பு ஏற்பது எனத் தெரியவில்லை. இதனால், இந்த ஆண்டு அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.