/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குறைதீர்வு கூட்டத்தில் 202 மனு ஏற்பு
/
குறைதீர்வு கூட்டத்தில் 202 மனு ஏற்பு
ADDED : ஜன 13, 2025 11:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு, செங்கல்பட்டில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 202 மனுக்கள் ஏற்கப்பட்டன.
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நேற்று நடந்தது.
இதில் இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாற்றம், மகளிர் உரிமைத்தொகை, தொழில் துவங்க கடன் உதவி, வேலைவாய்ப்பு, முதியோர் உதவித்தொகை, சாலை, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 202 மனுக்கள் வரப்பெற்றன.
இந்த மனுக்கள் மீது, சம்பந்தப்பட்டத் துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க, கலெக்டர் உத்தரவிட்டார்.