/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிங்கபெருமாள்கோவில் அரசு பள்ளியில் 21 மின் விசிறிகள் 'ஆட்டை'
/
சிங்கபெருமாள்கோவில் அரசு பள்ளியில் 21 மின் விசிறிகள் 'ஆட்டை'
சிங்கபெருமாள்கோவில் அரசு பள்ளியில் 21 மின் விசிறிகள் 'ஆட்டை'
சிங்கபெருமாள்கோவில் அரசு பள்ளியில் 21 மின் விசிறிகள் 'ஆட்டை'
UPDATED : அக் 25, 2025 03:12 AM
ADDED : அக் 24, 2025 10:33 PM
சிங்கபெருமாள் கோவில்: சிங்கபெருமாள்கோவில் அரசு பள்ளியில் இருந்து, 21 மின் விசிறிகள் திருடிச் சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
சிங்கபெருமாள் கோவில் - அனுமந்தபுரம் சாலையில், அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, 700க்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியர் படித்து வருகின்றனர்.
இங்குள்ள அனைத்து வகுப்பறைகளிலும், மாணவ -- மாணவியர் வசதிக்காக மின் விசிறிகள் அமைக்கப்பட்டிருந்தன.
மேலும், கழிப்பறைகளில் குழாய்கள் அமைத்து, தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை பள்ளி வளாகத்தில் புகுந்த மர்ம நபர்கள், வகுப்பறைகளின் பூட்டை உடைத்து, 21 மின் விசிறிகளை திருடிச் சென்றதுடன், கழிப்பறைகளில் உள்ள தண்ணீர் குழாய்களையும் உடைத்துவிட்டுச் சென்றுள்ளனர். இதுகுறித்து, மறைமலை நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
எச்சரித்த 'தினமலர்'
பள்ளி மாணவியரை, மாலை நேரங்களில் மர்ம நபர்கள் சிலர் பின்தொடர்ந்து கிண்டல் செய்து வருவது குறித்து, நம் நாளிதழில் சமீபத்தில் செய்தி வெளியிட்டு, போலீசார் ரோந்து செல்ல வேண்டும் என எச்சரிக்கை செய்யப்பட்டது. ஆனால், நடவடிக்கை இல்லை. இந்நிலையில், இந்த திருட்டு சம்பவமும் நடந்துள்ளது.

