/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வடபட்டினம் ஊராட்சியில் 21 தொகுப்பு வீடுகள் தயார்
/
வடபட்டினம் ஊராட்சியில் 21 தொகுப்பு வீடுகள் தயார்
வடபட்டினம் ஊராட்சியில் 21 தொகுப்பு வீடுகள் தயார்
வடபட்டினம் ஊராட்சியில் 21 தொகுப்பு வீடுகள் தயார்
ADDED : நவ 19, 2025 05:11 AM

செய்யூர்: வடபட்டினம் ஊராட்சியில் 21 இருளர் குடும்பத்தினருக்கு தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
கூவத்துார் அருகே வடபட்டினம் ஊராட்சியில் 60க்கும் மேற்பட்ட இருளர் மக்கள் வீட்டுமனைப் பட்டா மற்றும் சொந்த வீடு இல்லாமல் பல ஆண்டு களாக வசித்து வருகின்றனர்.
இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் தொகுப்பு வீடு வழங்க வேண்டும் என, நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 21 பயனாளிகளுக்கு, தலா 4.37 லட்சம் ரூபாய் என மொத்தம் 91 லட்சம் ரூபாயில், வீடுகள் கட்ட டெண்டர் விடப்பட்டது.
வடபட்டினம் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு முன் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டன.
தற்போது , தொகுப்பு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளன.

