/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
போதை பொருள் கடத்தும் 50 கும்பல்கள் 5 மாதங்களில் 2,117 பேர் கைது
/
போதை பொருள் கடத்தும் 50 கும்பல்கள் 5 மாதங்களில் 2,117 பேர் கைது
போதை பொருள் கடத்தும் 50 கும்பல்கள் 5 மாதங்களில் 2,117 பேர் கைது
போதை பொருள் கடத்தும் 50 கும்பல்கள் 5 மாதங்களில் 2,117 பேர் கைது
ADDED : ஜன 13, 2025 11:50 PM

சென்னை,போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் விதமாக, 2023 ஆக., 11ல், 'போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு' என்ற திட்டத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
அதன்படி, போதைப்பொருள் கடத்தல் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க, போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு துவக்கப்பட்டது.
இப்பிரிவினர் நடத்திய ஆய்வில், சென்னையில் 50 கும்பல் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டது.
இந்த கும்பலில் அடையாளம் காணப்பட்ட, 351 பேரில், 257 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஐந்து மாதங்களில், போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தல் சம்பந்தமாக, 707 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2,117 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில், 11 நைஜீரியர்கள்; ஒருவர் கேமரூன் நாட்டைச் சேர்ந்தவர்; 6 வெளிமாநில குற்றவாளிகள்; இருவர் பெண்கள்.
இவர்களிடம் இருந்து, 710 கிலோ கஞ்சா, 21.5 கிலோ மெத் ஆம் பெட்டமைன், 1.06 கிலோ மெத்தகுலோன், 39 கிலோ கேட்டமைன், 11.3 கிராம் ஹெராயின், 0.6 கிராம் கோகைன், 156 எல்.எஸ்.டி., ஸ்டாம் மற்றும் 295 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில், போதைப் பொருள் குற்றவாளிகள் 300 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சிறப்பாக செயல்பட்டு, போதைப் பொருள் கடத்தல் கும்பல்களை சேர்ந்தவர்களை கைது செய்த போதைப் பொருள் தடுப்பு நண்ணறிவு பிரிவு இணை கமிஷனர் தர்மராஜன், துணை கமிஷனர் சக்திகணேசன் உள்ளிட்டோரை, கமிஷனர் அருண் பாராட்டி, சான்றிதழ் வழங்கினார்.