/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
204 கல்லுாரி மாணவர்களுக்கு ரூ.21.32 கோடி கல்விக்கடன்
/
204 கல்லுாரி மாணவர்களுக்கு ரூ.21.32 கோடி கல்விக்கடன்
204 கல்லுாரி மாணவர்களுக்கு ரூ.21.32 கோடி கல்விக்கடன்
204 கல்லுாரி மாணவர்களுக்கு ரூ.21.32 கோடி கல்விக்கடன்
ADDED : பிப் 16, 2024 12:24 AM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த கல்லுாரி மாணவர்கள் பயன்பெறும் வகையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து வங்கிகள் சார்பில், சிறப்பு கல்விக்கடன் முகாம், நேற்று நடந்தது. முகாமை துவக்கி வைத்து, கலெக்டர் அருண்ராஜ் பேசியதாவது:
மாவட்டத்தில் கல்லுாரி மாணவர்கள் பயன்பெறும் வகையில், அனைத்து வங்கிகளின் சார்பில், கல்விக்கடன் வழங்கப்படுகிறது. இதில், 7.50 லட்சம் ரூபாய் வரை, எந்த பிணையும் இல்லாமல் கடன் பெறலாம்.
வித்யாலக்ஷ்மி இணையதளம் வழியாக, கல்விக்கடன் பெற விண்ணப்பிக்கலாம். இம்முகாமில், 204 மாணவர்களுக்கு, 21.32 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது.
கல்விக்கடன் பெறும் மாணவ - மாணவியர் தொடர்ந்து கல்வி பயின்று, வாழ்க்கையில் வளம்பெற்று, வங்கிக்கடனை திருப்பிச் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில், சப் - கலெக்டர் நாராயணசர்மா, மகளிர் திட்ட இயக்குனர் மணி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விஜயகுமார் மற்றும் 300க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர். முகாமில், 31 மாணவர்களுக்கு, 1.98 கோடி ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டன.