/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை மாவட்டத்தில் 23 ஏரிகள் நிரம்பின
/
செங்கை மாவட்டத்தில் 23 ஏரிகள் நிரம்பின
ADDED : அக் 15, 2024 07:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், 23 ஏரிகள் ழுழு கொள்ளளவு நிரம்பி வழிகின்றன.
செங்கல்பட்டு மாவட்டத்தில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில், 528 ஏரிகள் உள்ளன. இதில், 23 ஏரிகள் முழு கொள்ளளவு நிரம்பி வழிகின்றன.
மேலும், 51 ஏரிகள் 76 சதவீதமும், 99 ஏரிகள் 51 சதவீதமும், 172 ஏரிகள் 26 சதவீதமும், 183 ஏரிகள் 25 சதவீதமும் நீர் நிரம்பி வருகின்றன. இதனால், ஏரிகளை கண்காணிக்கும் பணியில், நீர்வளம், வருவாய் மற்றும் உள்ளாட்சி துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.