/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் 232 பேர் 'ஆப்சென்ட்'
/
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் 232 பேர் 'ஆப்சென்ட்'
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் 232 பேர் 'ஆப்சென்ட்'
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் 232 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : அக் 13, 2025 01:04 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில், 191 பெண்கள் உட்பட, 232 பேர் தேர்வு எழுத வரவில்லை என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகம் முழுதும் 1,996 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான தேர்வு, மாநில முழுதும் நேற்று நடந்தது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, வண்டலுார் தாலுகாவில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 11 மையங்களில், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு, 3,194 பேர் அனுமதிக்கப்பட்டதில், 2,962 தேர்வு எழுதினர்.
ஊரப்பாக்கம் சங்கர வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற தேர்வு மையத்தை, கலெக்டர் சினேகா ஆய்வு செய்தார். ஆய்வின் போது, முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், நேர்முக உதவியாளர் உதயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இந்த தேர்வில், ஆண்கள் 41 பேர், பெண்கள் 191 பேர் என, 232 பேர் தேர்வு எழுத வரவில்லை என, முதன்மைக் கல்வி அலுவலகம் தெரிவித்தது.