/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஸ்ரீபெரும்புதுார் அருகே வீட்டின் கதவை உடைத்து 25 சவரன் தங்கம், 200 கிராம் வெள்ளி கொள்ளை

ADDED : அக் 06, 2025 11:31 PM
ஸ்ரீபெரும்புதுார் ஸ்ரீபெரும்புதுார் அருகே வீட்டின் கதவை உடைத்து, 25 சவரன் தங்க நகை மற்றும் 200 கிராம் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் அருகே, பென்னலுார் சுகம்தரும்பேடு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன், 40; ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி நம்பி நாச்சியார், 35; தனியார் பள்ளி ஆசிரியர். தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
கண்ணன் கடந்த வெள்ளிக்கிழமை மனைவி மற்றும் குழந்தைகளுடன், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அம்மா வீட்டிற்கு சென்று, நேற்று காலை வீடு திரும்பினார்.
அப்போது, வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 25 கிராம் தங்கம் மற்றும் 200 கிராம் வெள்ளி பொருட்கள் திருடப்பட்டிருந்தது தெரிந்தது.
இது குறித்து, ஸ்ரீபெரும்புதுார் போலீசில் கண்ணன் அளித்த புகாரையடுத்து, வழக்கு பதிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வெளியூர் செல்லும் நபர்களை நோட்டமிட்டு கொள்ளை சம்பவம் நடந்திருப்பது, அப்பகுதி மக்களுக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
எனவே, போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.