/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
25ம் ஆண்டு வெள்ளி விழா சாந்திகிரி ஆசிரமத்தில் துவக்கம்
/
25ம் ஆண்டு வெள்ளி விழா சாந்திகிரி ஆசிரமத்தில் துவக்கம்
25ம் ஆண்டு வெள்ளி விழா சாந்திகிரி ஆசிரமத்தில் துவக்கம்
25ம் ஆண்டு வெள்ளி விழா சாந்திகிரி ஆசிரமத்தில் துவக்கம்
ADDED : ஜன 06, 2024 11:38 PM

செய்யூர்:கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை தலைமையிடமாக கொண்ட சாந்திகிரி ஆசிரமம், 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் இந்தியா முழுதும் 20 ஆசிரமங்கள் உள்ளன.
செய்யூர் சால்ட் ரோடு பகுதியில், கடந்த 9 ஆண்டுகளாக சாந்திகிரி ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து, 25வது ஆண்டு வெள்ளி விழா செய்யூரில் நேற்று கோலாகலமாக துவங்கியது.
விழாவில் பங்கேற்பதற்காக, செய்யூர் வந்த சாந்திகிரி ஆசிரமத்தின் தலைமை குருஸ்தானிய சிஷ்ய பூஜித அமிர்த ஞான தபஸ்வினிக்கு, ஆசிரமத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து நடந்த துவக்க விழாவில், தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு குத்துவிளக்கு ஏற்றி, விழாவை துவக்கி வைத்தார்.