/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விபத்து அவசர சிகிச்சையால் பயனடைந்தோர் 2,677 பேர்! அரசு மருத்துவமனைகளுக்கு செல்வோர் அதிகரிப்பு
/
விபத்து அவசர சிகிச்சையால் பயனடைந்தோர் 2,677 பேர்! அரசு மருத்துவமனைகளுக்கு செல்வோர் அதிகரிப்பு
விபத்து அவசர சிகிச்சையால் பயனடைந்தோர் 2,677 பேர்! அரசு மருத்துவமனைகளுக்கு செல்வோர் அதிகரிப்பு
விபத்து அவசர சிகிச்சையால் பயனடைந்தோர் 2,677 பேர்! அரசு மருத்துவமனைகளுக்கு செல்வோர் அதிகரிப்பு
ADDED : செப் 07, 2024 07:29 AM
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில், இன்னுயிர் காப்போம் திட்டத்தில், விபத்தில் காயமடைந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. 2023ல் இருந்து கடந்த ஜூலை வரை, 5,157 விபத்துகளில் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பெற்ற, 2,677 பேருக்கு, அரசு சார்பில், 2.58 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், சாலை விபத்து ஏற்பட்ட 48 மணி நேரத்திற்கு, கட்டணமில்லா சிகிச்சையளிக்க, 'இன்னுயிர் காப்போம் - நம்மைக் காப்போம்' திட்டத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின் 2021ம் ஆண்டு டிச., 18ல் துவக்கி வைத்தார்.
இத்திட்டத்திற்கென, அங்கீகரிக்கப்பட்ட 201 அரசு மருத்துவமனைகள் மற்றும் 408 தனியார் மருத்துவமனைகள் என, மொத்தம் 609 மருத்துவமனைகள், தகுதியின் அடிப்படையில் இணைக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் வாயிலாக, முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை உடையவர்கள், இல்லாதவர்கள், பிற மாநிலத்தவர், வெளிநாட்டவர் என, அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்படும்.
வருமான வரம்பு ஏதும் கணக்கில் கொள்ளாமல், தமிழ்நாட்டின் எல்லைக்குள் ஏற்படும் சாலை விபத்துகளில் காயமடைவோருக்கு, முதல் 48 மணி நேரம் வரை, கட்டணமின்றி மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட 81 மருத்துவ சிகிச்சை முறைகளுக்கு, ஒருவருக்கு 1 லட்சம் ரூபாய் வரை சிகிச்சை மேற்கொள்ளப்படும். இதில், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர் உள்நோயாளியாக அனுதிக்கப்படும் மருத்துவமனையிலேயே, முதல் 48 மணி நேரம் வரை அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை பெறலாம்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம், திருப்போரூர், தாம்பரம், சானடோரியம் ஆகிய பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகள் இத்திட்டத்தின் கீழ் இணைந்துள்ளன.
மேல்மருத்துார், மதுராந்தகம், திருப்போரூர், தாம்பரம் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை உள்ளிட்ட 16 மருத்துவமனைகளில், இன்னுயிர் காப்போம் - -நம்மைக் காக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில், எட்டு அரசு மருத்துவமனைகளில், 2023ம் ஆண்டு, சாலை விபத்தில் காயமடைந்தவர்கள் 1,677 பேருக்கும், கடந்த ஜூலை மாதம் வரை, 1,000 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.
குறிப்பிட்ட 16 தனியார் மருத்துவமனைகளில், 2023ம் ஆண்டு, 44 பேருக்கும், கடந்த ஜூலை 16ம் வரை 26 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகளை விட, இத்திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் அதிக அளவில் சிகிச்சை அளிகப்பட்டு உள்ளது.