/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கொளத்துார் செல்லியம்மன் கோவில் 27வது நாள் மண்டலாபிஷேக விழா
/
கொளத்துார் செல்லியம்மன் கோவில் 27வது நாள் மண்டலாபிஷேக விழா
கொளத்துார் செல்லியம்மன் கோவில் 27வது நாள் மண்டலாபிஷேக விழா
கொளத்துார் செல்லியம்மன் கோவில் 27வது நாள் மண்டலாபிஷேக விழா
ADDED : செப் 20, 2024 12:14 AM

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த கொளத்துார் கிராமத்தில், 700 ஆண்டுகள் பழமைவாய்ந்த செல்லியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், கடந்த ஆக., 21ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது.
அதைத் தொடர்ந்து, தினமும் மாலை மண்டலாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. 27வது நாளான மண்டலாபிஷேக விழா, நேற்று முன்தினம் இரவு நடந்தது.
விழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, 300 சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல் உள்ளிட்டவை அடங்கிய பிரசாத பை வழங்கப்பட்டது.
இதில், கொளத்துார், மாம்பாக்கம், பனங்காட்டுப்பாக்கம் கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.