/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நெரும்பூர் ஆதிதிராவிடர் பள்ளிக்கு ரூ.2.80 கோடியில் கூடுதல் கட்டடம்
/
நெரும்பூர் ஆதிதிராவிடர் பள்ளிக்கு ரூ.2.80 கோடியில் கூடுதல் கட்டடம்
நெரும்பூர் ஆதிதிராவிடர் பள்ளிக்கு ரூ.2.80 கோடியில் கூடுதல் கட்டடம்
நெரும்பூர் ஆதிதிராவிடர் பள்ளிக்கு ரூ.2.80 கோடியில் கூடுதல் கட்டடம்
ADDED : நவ 15, 2024 01:20 AM

நெரும்பூர்:திருக்கழுக்குன்றம் அடுத்த நெரும்பூர் பகுதியில், அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி இயங்குகிறது. நெரும்பூர் மற்றும் சுற்றுப்புற பகுதி மாணவ - மாணவியர் பயில்கின்றனர்.
இப்பள்ளிக்கு, ஒரே வகுப்பறை கட்டடம் மட்டுமே உள்ளது. பள்ளி மேம்பாட்டிற்கு, கூடுதல் கட்டடம் கட்ட வேண்டும் என, மாணவ - மாணவியரின் பெற்றோர் வலியுறுத்தினர்.
இதையடுத்து, நபார்டு திட்டத்தின்கீழ், 2.80 கோடி ரூபாய் மதிப்பில், கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டப்படுகிறது. அதன் தரைத்தளத்தில், நான்கு வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள், முதல்தளத்தில் இரண்டு அறிவியல் ஆய்வகங்கள் மற்றும் கழிப்பறைகள், இரண்டாம் தளத்தில், நான்கு வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் என, இக்கட்டடம் அமைகிறது.