/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மின்சாரம் பாய்ந்து 3 பசு மாடுகள் பலி
/
மின்சாரம் பாய்ந்து 3 பசு மாடுகள் பலி
ADDED : டிச 02, 2024 02:44 AM

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த கொண்டமங்கலம் எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 60; விவசாயி. இவர், நேற்று மதியம் தனக்கு சொந்தமான பசு மாடுகளை, கொண்டமங்கலம் பகுதியில் உள்ள விளைநிலத்திற்க்கு மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றார்.
மாடுகள் மேய்ந்து கொண்டிருந்த போது தொடர் மழை மற்றும் காற்றின் காரணமாக, அந்த பகுதியில் சென்ற மின் கம்பம் முறிந்து, மின் கம்பிகள் மாடுகளின் மீது விழுந்தன.
இதில், இரண்டு பசு மாடுகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. தகவலறறறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிங்கபெருமாள் கோவில் மின்வாரிய ஊழியர்கள், மின் இணைப்பை துண்டித்து, இறந்த மாடுகளின் உடல்களை மீட்டனர். இதுகுறித்து, மறைமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
திருப்போரூர்
திருப்போரூர் ஒன்றியம், நாவலூர் அருகே இரும்பு மின்கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து இருந்தது. நேற்று நள்ளிரவு 12:30 மணிக்கு, அந்த மின்கம்பத்தில் உரசிய பசு மாட்டின் மீது மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
நெரும்பூர்
திருக்கழுக்குன்றம் அடுத்த நடுவக்கரையைச் சேர்ந்த செல்வி என்பவருக்கு சொந்தமான பசு மாடு, நேற்று மாலை 4:30 மணிக்கு, மேய்ச்சலுக்கு சென்றது.
நெரும்பூர் சாலையில் உள்ள தரைப்பாலத்தின்கீழ் உள்ள கால்வாயில் இறங்கியது. கனழையால் கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி, மீண்டும் வெளியேற முடியாமல் தவித்தது.
தகவல் அறிந்து வந்த திருக்கழுக்குன்றம் தீயணைப்பு வீரர்கள், வெள்ளத்தில் தத்தளித்த பசு மாட்டை மீட்டு, உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.