/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பைக் மீது கார் மோதிய விபத்தில் தம்பதி, மகன் உட்பட 3 பேர் பலி
/
பைக் மீது கார் மோதிய விபத்தில் தம்பதி, மகன் உட்பட 3 பேர் பலி
பைக் மீது கார் மோதிய விபத்தில் தம்பதி, மகன் உட்பட 3 பேர் பலி
பைக் மீது கார் மோதிய விபத்தில் தம்பதி, மகன் உட்பட 3 பேர் பலி
ADDED : ஏப் 03, 2025 02:20 AM

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த காயாரில், பைக் மீது கார் மோதிய விபத்தில் கணவன், மனைவி, மகன் உட்பட 3 பேர் பலியாகினர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த தையூர் ஊராட்சியில் அடங்கிய பாலமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிதாஸ், 34; தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இவரது மனைவி சுகந்தி, 33. மகன்கள் லியோடேனியல், 10, ஜோடேனியல், 5.
இவர் நேற்று முன்தினம் மாலை, திருப்போரூரை அடுத்த காயார் கிராமத்திலுள்ள தன் உறவினர் வீட்டின் சுபநிகழ்ச்சிக்கு சென்றார்.
அதன்படி ஹரிதாஸ், மனைவி சுகந்தி மற்றும் மகன்கள் இருவர் என நால்வரும், 'ஹீரோ ஹோண்டா ஸ்பிளென்டர்' பைக்கில் சென்றனர்.
நிகழ்ச்சி முடிந்து, இரவு 11:00 மணியளவில் நால்வரும் வீடு திரும்பினர்.
கயார் - தையூர் சாலையில் சென்ற போது, தனியார் பள்ளி அருகே வேகமாக வந்த கார், திடீரென இவர்களின் பைக் மீது மோதியது.
இதில் ஹரிதாஸ், அவரது மனைவி, மகன்கள் அனைவரும் கீழே விழுந்து, பலத்த காயமடைந்தனர்.
உடனே அங்கிருந்தோரும், தகவலின்படி வந்த கயார் போலீசாரும் அவர்களை மீட்டு, கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் ஹரிதாஸ், அவரது மகன் லியோடேனியல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சுகந்தி, மகன் ஜோடேனியலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சுகந்தி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இவர்களது மகன் ஜோடேனியல் மட்டும் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இறந்த மூவரின் உடலை மீட்ட போலீசார், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதுகுறித்து கயார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
முதற்கட்ட விசாரணையில், கேளம்பாக்கத்தில் செருப்பு கடை வைத்துள்ள, காயார் கிராமத்தைச் சேர்ந்த அஸ்வின் குமார், 43, என்பவர் காரை ஓட்டி வந்துள்ளது தெரிந்தது.
நேற்று இரவு கடையில் வியாபாரத்தை முடித்துவிட்டு, காயாரில் உள்ள வீட்டிற்கு, காரில் மனைவி பிந்து, 35, மகன் அபினேஷ் பால்மோனி,6, ஆகியோருடன் சென்றுள்ளார். காயார் அருகே வந்தபோது மேற்கண்ட விபத்து நடந்தது தெரிந்தது.
இவர்கள் மூவருக்கும் லேசான காயம் ஏற்பட்டதால், மூவரும் கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து, காயார் போலீசார் மேலும் விசாரிக்கின்றனர்.