/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வீட்டின் பூட்டை உடைத்து 3 சவரன் நகை திருட்டு
/
வீட்டின் பூட்டை உடைத்து 3 சவரன் நகை திருட்டு
ADDED : ஆக 31, 2025 11:04 PM
மதுராந்தகம்:மதுராந்தகத்தில், வீட்டின் பூட்டை உடைத்து, மூன்று சவரன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
மதுராந்தகம் அடுத்த ஐஸ்வர்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரசன்னா. இவரது மனைவி வசந்தி, 41.
மதுராந்தகத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை செய்து வரும் வசந்தி, கணவருடன் மதுராந்தகத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார்.
கடந்த 28ம் தேதி காலை வீட்டை பூட்டிக் கொண்டு, தஞ்சாவூரில் உள்ள உறவினர் வீட்டு இல்ல நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.
பின், நேற்று தஞ்சாவூரில் இருந்து மதுராந்தகம் வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த மூன்று சவரன் தங்க நகையை, மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து வசந்தி அளித்த புகாரின்படி, மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.