/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஒரகடத்தில் வழிப்பறி 3 பேர் கைது
/
ஒரகடத்தில் வழிப்பறி 3 பேர் கைது
ADDED : பிப் 14, 2024 11:32 PM

ஒரகடம்:காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில் பணி முடிந்து வந்த வடமாநில தொழிலாளர்கள் நான்கு பேரிடம், கடந்த 9ம் தேதி இரவு, பைக்கில் வந்த மர்ம கும்பல் மூன்று பேர், வழிமறித்து தாக்கி மிரட்டி, மொபைல் போனை பறித்து தப்பினர்.
ஒரகடம் போலீசார் வழக்கு பதிந்து, மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க, தனிப்படை அமைத்து, 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தேடி வந்தனர்.
அதில், காரணித்தாங்கல் பகுதியைச் சேர்ந்த ரிஷத் குமார், 24, அவரது தம்பி யுவனேஷ் குமார், 20, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி, 19, ஆகிய மூன்று பேர் வழிப்பறி செய்ததை கண்டுபிடித்து, அவர்களை போலீசார் நேற்று கைது செய்தனர்.

