/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
30 ஆண்டு பழமையான பனைமரங்கள் சாலை விரிவாக்க பணிக்காக அகற்றம்
/
30 ஆண்டு பழமையான பனைமரங்கள் சாலை விரிவாக்க பணிக்காக அகற்றம்
30 ஆண்டு பழமையான பனைமரங்கள் சாலை விரிவாக்க பணிக்காக அகற்றம்
30 ஆண்டு பழமையான பனைமரங்கள் சாலை விரிவாக்க பணிக்காக அகற்றம்
ADDED : ஏப் 16, 2025 01:34 AM

திருப்போரூர்:ஓ.எம்.ஆர்., எனும், பழைய மாமல்லபுரம் சாலை சென்னை, மத்திய கைலாஷ் பகுதியில் துவங்கி, மாமல்லபுரம் அருகே முடிவடைகிறது.
இந்த வழித்தடத்தில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள், மென்பொருள் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், நட்சத்திர ஹோட்டல்கள், பொழுதுபோக்கு மையங்கள் உள்ளன.
ஓ.எம்.ஆர்., சாலையில் நாள்தோறும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதன் காரணமாக, இந்த சாலையில் காலை மற்றும் மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்நிலையில், ஓ.எம்.ஆர்., சாலையில், சிறுசேரி சிப்காட் சிக்னல் முதல் மாமல்லபுரம் வரை, தற்போது உள்ள நான்கு வழிச்சாலையை ஆறுவழிச் சாலையாக அகலப்படுத்த, நெடுஞ்சாலைத் துறை மற்றும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை நடவடிக்கை மேற்கொண்டன.
இதையடுத்து, சிறுசேரி சிப்காட் சிக்னல் முதல் படூர் வரை, சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகள் படிப்படியாக அகற்றப்பட்டன.
தற்போது சாலை விரிவாக்கப் பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சிறுசேரி சிப்காட் சிக்னல் அருகே, 50க்கும் மேற்பட்ட 30 ஆண்டுகள் பழமையான பனை மரங்கள் இருந்தன.
சாலை விரிவாக்கப் பணி காரணமாக, இந்த பனை மரங்கள் கடந்த 13ம் தேதி முதல் அகற்றப்பட்டு வருகின்றன. இதனால், இயற்கை ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
சாலை விரிவாக்க பணிகளுக்காக பனை மரம் உள்ளிட்ட மற்ற மரங்களை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும், அதற்கு மாற்றாக, மற்ற இடத்தில் பனை மரம் நட்டு வளர்க்க வேண்டும் என, ஆதங்கம் தெரிவித்து உள்ளனர்.

