/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
300 கிலோ குட்கா பறிமுதல் - மளிகை கடைக்காரர் கைது
/
300 கிலோ குட்கா பறிமுதல் - மளிகை கடைக்காரர் கைது
ADDED : ஜூன் 22, 2025 02:53 AM

அச்சிறுபாக்கம்:முருங்கை ஊராட்சிக்குட்பட்ட முன்னக்குளம் கிராமத்தில், குட்கா பொருட்களை பதுக்கி விற்பனை செய்த, மளிகைக் கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
முன்னக்குளம் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமரேசன், 35. இவர், அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், மளிகை கடையில், கடந்த சில மாதங்களாக, குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக, ஒரத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
ஒரத்தி போலீசார், நேற்று முன்தினம், மளிகை கடைக்காரர் முருகேசன் என்பவருக்கு, சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள மின்மோட்டார் அறையில், 1.50 லட்சம் ரூபாய் மதிப்பு உள்ள, 10 க்கும் மேற்பட்டட சாக்கு மூட்டைகளில், 300 கிலோ எடைக் கொண்ட ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.