ADDED : அக் 16, 2024 12:38 AM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில், 528 ஏரிகள் உள்ளன. இதில், 23 ஏரிகள் முழு கொள்ளளவு நிரம்பி வழிகின்றன.
மேலும், 51 ஏரிகள் 76 சதவீதமும், 99 ஏரிகள் 51 சதவீதமும், 172 ஏரிகள் 26 சதவீதமும், 183 ஏரிகள் 25 சதவீதமும் நீர் நிரம்பி வருகின்றன. இதனால், ஏரிகளை கண்காணிக்கும் பணியில், நீர்வளம், வருவாய் மற்றும் உள்ளாட்சி துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல், ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 620 ஏரிகளில், எட்டு ஏரிகளும், 2,512 குளங்களில் 80 குளங்களும் முழு கொள்ளளவு நிரம்பி வழிவதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில், 57 ஏரிகள் 76 சதவீதமும், 86 ஏரிகள் 51 சதவீதமும், 146 ஏரிகள் 26 சதவீதமும், 323 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பி வருகின்றன. அதேபோல், 419 குளங்கள் 76 சதவீதமும், 345 குளங்கள் 51 சதவீதமும், 524 குளங்கள் 26 சதவீதமும், 1,144 குளங்கள் 25 சதவீமும் நீர் நிரம்பி வருகின்றன என, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.