/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தொடர் விடுமுறை எதிரொலி 33 லட்சம் பேர் வெளியூர் பயணம்
/
தொடர் விடுமுறை எதிரொலி 33 லட்சம் பேர் வெளியூர் பயணம்
தொடர் விடுமுறை எதிரொலி 33 லட்சம் பேர் வெளியூர் பயணம்
தொடர் விடுமுறை எதிரொலி 33 லட்சம் பேர் வெளியூர் பயணம்
ADDED : ஏப் 13, 2025 08:56 PM
கிளாம்பாக்கம்:தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டு, அரசு பேருந்துகள் வாயிலாக 33 லட்சத்து 2 ஆயிரத்து 695 பேர் வெளியூர் பயணம் செய்துள்ளதாக, தமிழக போக்குவரத்து துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசு போக்குவரத்து துறை அறிக்கை:
நேற்று முன்தினம் பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலம் செல்ல, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர் செல்ல, லட்சத்திற்கும் மேற்பட்டோர் அரசு பேருந்துகளில் பயணிப்பர் என்பதைக் கருதி, சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டது.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து, தினமும் வெளியூர்களுக்கு 2,092 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இத்துடன் சனிக் கிழமையன்று, 1,153 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதன் வாயிலாக 17 லட்சத்து 8 ஆயிரத்து 475 பயணியர் வெளியூர் சென்றனர்.
தவிர, ஞாயிறு அன்று வழக்கமாக செல்லக்கூடிய 2,092 பேருந்துகளுடன், 712 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. இதன் வாயிலாக 15 லட்சத்து 4 ஆயிரத்து 220 நபர்கள் வெளியூர் பயணித்தனர்.
மொத்தத்தில், கடந்த 11ம் தேதி நள்ளிரவு முதல், 14ம் தேதி அதிகாலை 2:00 மணி வரை, 6,049 பேருந்துகளில், 33 லட்சத்து 2 ஆயிரத்து 695 பயணியர் வெளியூர் பயணித்துள்ளனர்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.