/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் கூட்டுறவு வார விழா ரூ.35.71 கோடி கடன் உதவி வழங்கல்
/
செங்கையில் கூட்டுறவு வார விழா ரூ.35.71 கோடி கடன் உதவி வழங்கல்
செங்கையில் கூட்டுறவு வார விழா ரூ.35.71 கோடி கடன் உதவி வழங்கல்
செங்கையில் கூட்டுறவு வார விழா ரூ.35.71 கோடி கடன் உதவி வழங்கல்
ADDED : நவ 20, 2024 01:17 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், 71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா, மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி தலைமையில், நேற்று முன்தினம் நடந்தது. மாவட்ட மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் நந்தகுமார் வரவேற்றார்.
இதில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்று, சிறந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு பாராட்டு கேடயங்கள் மற்றும் 1,678 பயனாளிகளுக்கு 35.71 கோடி ரூபாய் கடன் உதவிகளை வழங்கினார்.
பின் அவர் பேசியதாவது:
கூட்டுறவு இயக்கத்தையும் கூட்டுறவு அமைப்புகளையும் மேம்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கில், அரசால் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவும், ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை, இந்தியா முழுதும் கூட்டுறவு வார விழா கொண்டாடப்படுகிறது.
மகளிர் சுய உதவி கடன், மகளிர் தொழில் முனைவோர் கடன், பணிபுரியும் மகளிர் கடன், மாற்றுத்திறனாளி கடன் என, 25 வகையான கடன்களை, 1,678 பயனாளிகளுக்கு, 35.71 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக கூட்டுறவு துறையில், 23,221 பதிவு செய்யப்பட்ட சங்கங்களில், 2 கோடியே 23 லட்சத்து 45 ஆயிரத்து 347 நபர்கள் உறுப்பினராக உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், 611 பதிவு செய்யப்பட்ட சங்கங்களில், 4 லட்சத்து 22 ஆயிரத்து 216 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். 841 நியாய விலை கடைகள் வாயிகாக, 4 லட்சத்து 44 ஆயிரத்து 406 குடும்ப அட்டைகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில், 2024 - 25ம் ஆண்டில், 25 வகையான கடன்களை உள்ளடக்கி, ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 85 நபர்களுக்கு, 1,125 கோடியே 87 லட்சம் ரூபாய் கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பொறுப்பேற்று மூன்றரை ஆண்டுகளில், ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 750 புதிய மகளிர் சுய உதவி குழுக்கள் உருவாக்கப்பட்டு, 92,000 ரூபாய் கோடி கடன் உதவி வழங்கப்பட்டு, 14 லட்சத்து 91 ஆயிரத்து 985 மகளிர் பயனடைந்துள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சிவமலர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.