ADDED : நவ 28, 2024 02:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில், 528 ஏரிகள் உள்ளன. மாவட்டத்தில், சில மாதங்களாக பெய்த மழையில், ஏரிகளில் தண்ணீர் தேங்கியது. நேற்று முன்தினம் பெய்த மழையில், 36 ஏரிகள் முழு கொள்ளளவு நிரம்பி வழிகின்றன.
இதில், 81 ஏரிகளில் 76 சதவீமும், 132 ஏரிகளில் 51 சதவீதமும், 185 ஏரிகளில் 25 சதவீதமும், 94 ஏரிகளில் 25 சதவீதமும் நீர் நிரம்பி உள்ளன.
இதனால், நீர்வளத்துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சி அமைப்பினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 620 ஏரிகள், 2,512 குளங்களில் நீர் நிரம்பி வருகிறது என, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.