/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குறைதீர் கூட்டத்தில் 385 மனுக்கள் ஏற்பு
/
குறைதீர் கூட்டத்தில் 385 மனுக்கள் ஏற்பு
ADDED : பிப் 13, 2024 04:00 AM
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, கூடுதல் கலெக்டர் அனாமிகா உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், இலவச வீட்டுமனை, சாலை, குடிநீர், மின் ஆகிய வசதிகள், வேலை வாய்ப்பு, பேருந்து வசதி, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 385 மனுக்கள் வரப்பெற்றன.
இந்த மனுக்கள் மீது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.
மாவட்டத்தில் முதல் முறையாக, பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை கணினியில் பதிவு செய்து, வருவாய்த்துறை ஊழியர்கள் ரசீது வழங்கினர்.