/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிளாம்பாக்கம் முனையத்திலிருந்து 2 நாளில் 4 லட்சம் பேர் பயணம்
/
கிளாம்பாக்கம் முனையத்திலிருந்து 2 நாளில் 4 லட்சம் பேர் பயணம்
கிளாம்பாக்கம் முனையத்திலிருந்து 2 நாளில் 4 லட்சம் பேர் பயணம்
கிளாம்பாக்கம் முனையத்திலிருந்து 2 நாளில் 4 லட்சம் பேர் பயணம்
ADDED : ஜன 12, 2025 08:37 PM
கூடுவாஞ்சேரி:வண்டலுார் அடுத்துள்ள கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து, பொங்கல் பண்டிகைக்கு வழக்கமான பேருந்து, கூடுதல் சிறப்பு பேருந்துகள் என, மொத்தம் 4,107 பேருந்துகளில், கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை இரு நாட்களில் மட்டும், 4 லட்சத்து 13 ஆயிரத்து 215 பயணியர் பயணம் செய்துள்ளனர்.
அதேபோன்று பண்டிகை முடிந்து, சென்னை திரும்பும் பயணியருக்கு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகின்றன.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர் வசதிக்காக, மாலை 5:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை, இசை கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர் இங்கு சிறிது நேரம் காத்திருந்து, இசை கச்சேரியை ரசித்துவிட்டுச் செல்கின்றனர்.
அதேபோன்று குழந்தைகளை மகிழ்விக்கும் விதமாக, சிறு சிறு விளையாட்டுகளும் தற்காலிகமாக அமைக்கப்பட்டு உள்ளன. பயணியருக்கான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.