/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை திருட்டு
/
வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை திருட்டு
ADDED : நவ 20, 2024 10:12 PM
மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த கருங்குழி பகுதியைச் சேர்ந்தவர் மேகநாதன், 60. இவர், நேற்று முன்தினம், சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தன் மகளை பார்ப்பதற்காக சென்றுள்ளார்.
பின், நேற்று சென்னையில் இருந்து கிளம்பி, கருங்குழியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 40 சவரன் தங்க நகைகளை, மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து, மதுராந்தகம் போலீசாருக்கு மேகநாதன் தகவல் அளித்துள்ளார். தகவலின்படி, சம்பவ இடத்திற்கு சென்ற மதுராந்தகம் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் பதிவு செய்யப்பட்டன.
பின், வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு, போலீசார் விசாரித்து வருகின்றனர்.