/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை கொள்ளை
/
வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை கொள்ளை
ADDED : ஜன 03, 2025 08:03 PM
திருக்கழுக்குன்றம்:பெரியகாட்டுப்பாக்கத்தில், வீட்டின் பூட்டை உடைத்து, 40 சவரன் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
திருக்கழுக்குன்றம் அடுத்த பெரியகாட்டுப்பாக்கத்தைச் சேர்ந்தவர் நரேஷ், 35. கடந்த 1ம் தேதி இரவு வீட்டை பூட்டிக் கொண்டு, குடும்பத்தினருடன் தாம்பரத்தில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றார்.
அன்று நள்ளிரவு வீடு திரும்பிய போது, வீட்டின் பின்புற கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகள் உள்ளிட்டவை கொள்ளை போயிருந்தன.
இதுகுறித்து, திருக்கழுக்குன்றம் போலீசில், அவர் புகார் அளித்துள்ளார்.
போலீசார் புகாரை பதியாமல் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது உறவினரான, தாம்பரம் பகுதி தி.மு.க., பிரமுகர் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, போலீசார் நேற்று முன்தினம் இரவு இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
40 சவரன் நகைகள், பல கிலோ வெள்ளிப் பொருட்கள், 8,000 ரூபாய் ஆகியவை கொள்ளை போனதாக புகார் அளிக்கப்பட்டு உள்ளதாக, போலீசார் தெரிவித்து உள்ளனர்.

