/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிராம உதவியாளர் தேர்வு 406 பேர் 'ஆப்சென்ட்'
/
கிராம உதவியாளர் தேர்வு 406 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : செப் 07, 2025 12:15 AM
செங்கல்பட்டு:கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வில், 406 பேர் தேர்வு எழுத வரவில்லை என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலகில், திருக்கழுக்குன்றம், தாம்பரம், வண்டலுார், மதுராந்தகம், செய்யூர் ஆகிய தாலுகாவில், 41 கிராம உதவியாளர் பணியடங்கள் காலியாக உள்ளன. மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் இருந்து பெறப்பட்ட பட்டியல் மற்றும் நேரடியாக பெறப்பட்ட விண்ணப்பங்களை கூராய்வு செய்து, ஏற்கப்பட்ட தேர்வர்களுக்கான எழுத்து தேர்வு நேற்று, நடந்தது.
தேர்வு எழுத 2,868 பேர் அனுமதிக்கப்பட்டிருந்ததில், 2,462 பேர் தேர்வு எழுதினர். 406 பேர் தேர்வு எழுத வரவில்லை என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.