/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குறைதீர்வு கூட்டத்தில் 425 மனுக்கள் ஏற்பு
/
குறைதீர்வு கூட்டத்தில் 425 மனுக்கள் ஏற்பு
ADDED : பிப் 06, 2024 04:14 AM

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் கூட்ட அரங்கில், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேற்று குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, வேளாண்மை இணை இயக்குனர் அசோக் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில், சாலை, குடிநீர் வசதி, பேருந்து வசதி, இலவச வீட்டுமனை பட்டா, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம், பட்டா மாற்றம், வேலைவாய்ப்பு, மாற்றுத்திறனாளி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 425 மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, திருச்சியில் நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில், செங்கல்பட்டு மாவட்டம், ஒக்கியம்துரைப்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி பிரேமா, மல்லர் கம்பம் போட்டியில், வெள்ளி பதக்கம் பெற்றார். இதை கலெக்டரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.