/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குரூப் -2 தேர்வு 4,713 பேர் 'ஆப்சென்ட்'
/
குரூப் -2 தேர்வு 4,713 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : செப் 28, 2025 11:50 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், டி.என்.பி.எஸ்.சி., - குரூப் - 2 மற்றும் குருப் - '2ஏ' தேர்வு எழுத, 4,713 பேர் வரவில்லை என, மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.
செ ங்கல்பட்டு மாவட்டத்தில், டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2, குரூப் - '2ஏ' பதவிகளுக்கான தேர்வுக்கு, 15,504 பேர் அனுமதிக்கப்பட்டனர்.
மாவட்டத்தில் செங்கல்பட்டு, ம துரா ந்தகம், தாம்பரம் ஆகிய தாலுகாக்களில், அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகளில், 56 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த மையங்களில், 10,792 பேர், நேற்று தேர்வு எழுதினர். 4,713 பேர் தேர் வு எழுத வரவில்லை.
இதற்காக, சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அந்தந்த மையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தேர்வு முடிந்தவுடன், விடைத்தாள்கள் கருவூலகத்தில் வைக்கப் பட்டன. இங்கு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.