/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
5 பூங்காவில் 'ஜிம்' மாநகராட்சி நடவடிக்கை
/
5 பூங்காவில் 'ஜிம்' மாநகராட்சி நடவடிக்கை
ADDED : செப் 07, 2025 10:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம்:தாம்பரம் மாநகராட்சி ஐந்தாவது மண்டலத்தில், ஐந்து பூங்காக்களில், 80 லட்சம் ரூபாய் செலவில், திறந்தவெளி உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்பட உள்ளன.
தாம்பரம் மாநகராட்சியில், ஐந்து மண்டலங்கள் உள்ளன.
இதில், ஐந்தாவது மண்டலமான கிழக்கு தாம்பரத்தில் உள்ள ஐந்து பூங்காக்களில், 80 லட்சம் ரூபாய் செலவில், திறந்தவெளி உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்பட உள்ளன.
அதன்படி, திருப்பூர் குமரன் பூங்கா, சுப்புராயன் பூங்கா, ஜெகஜீவன்ராம் நகர், குமாரசாமி நகர், மல்லீஸ்வரி நகர் பூங்காக்களில் தலா, 16 லட்சம் ரூபாய் செலவில், திறந்தவெளி உடற்பயிற்சி கூடங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன.