/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பூட்டிய வீட்டில் 5 சவரன் திருட்டு
/
பூட்டிய வீட்டில் 5 சவரன் திருட்டு
ADDED : ஜன 28, 2025 08:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கபெருமாள் கோவில்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த பெரிய விஞ்சியம்பாக்கம் ஈஸ்வரி நகரைச் சேர்ந்தவர் ஹரிப்ரியா,24. தனியார் பள்ளி ஆசிரியை.
நேற்று காலை இவர், வீட்டை பூட்டி விட்டு பணிக்கு சென்றார்.
மீண்டும், மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது, பீரோவில் இருந்த 5 சவரன் தங்க நகை திருடப்பட்டது தெரிந்தது.
தகவலறிந்து வந்த மறைமலைநகர் போலீசார் நடத்திய விசாரணையில், கதவு பூட்டை கள்ளச்சாவி வாயிலாக திறந்த மர்ம நபர்கள், நகையை திருடிவிட்டு, மீண்டும் வீட்டை பூட்டிச் சென்றது தெரிந்தது. போலீசார் மர்ம நபர்களை தேடுகின்றனர்.