/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லபுரம் அருகே அதிவேகமாக வந்த கார் மோதி 5 பெண்கள் உயிரிழப்பு
/
மாமல்லபுரம் அருகே அதிவேகமாக வந்த கார் மோதி 5 பெண்கள் உயிரிழப்பு
மாமல்லபுரம் அருகே அதிவேகமாக வந்த கார் மோதி 5 பெண்கள் உயிரிழப்பு
மாமல்லபுரம் அருகே அதிவேகமாக வந்த கார் மோதி 5 பெண்கள் உயிரிழப்பு
UPDATED : நவ 27, 2024 06:56 PM
ADDED : நவ 27, 2024 03:15 PM

திருப்போரூர்: செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கார் மோதிய விபத்தில் 5 பெண்கள் உயிரிழந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பண்டிதமேடு ஓ.எம்.ஆர்., சாலையில், பெண்கள் மாடு மேய்த்துக் கொண்டு இருந்தனர். அப்போது 5 பெண்கள், அங்கு சாலையை கடக்க முயன்றனர்.
அந்த வழியாக அதிவேகமாக வந்த கார், அவர்கள் மீது மோதியது. இதில், லோகாம்பாள் விஜயா, யசோதா, ஆனந்தாயி, கவுரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
இதனையடுத்து காரில் வந்த இருவரை மறித்த பொது மக்கள் அவர்கள் மீது சராமரியாக தாக்குதல் நடத்தினர். தகவல் அறிந்து வந்த போலீசார், இருவரை மீட்டு போலீஸ் ஸ்டேசன் அழைத்துச் செல்ல முயன்றனர். இதனையடுத்து போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்ட பொது மக்கள், அவர்களை தங்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இறந்தவர்களின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காரில் இருந்தவர்கள் அதிவேகத்தில் வந்ததாகவும், இருவர் தப்பிய நிலையில் பிடிபட்டவர்கள் மதுபோதையில் இருந்ததாக பொது மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இருவர் கைது
இந்தச் சம்பவம் தொடர்பாக சித்தலபாக்கத்தைச் சேர்ந்த ஜோஸ்வா(19) மற்றும் பெருங்குடியைச் சேர்ந்த தாஹித் அஹமது(19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில், காரில் ஐந்து பேர் இருந்ததாகவும், ஜோஸ்வா காரை ஓட்டி வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இரங்கல்
இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், உயிரிழப்பு குறித்து தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்ததாகவும், அவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார்.

