/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நீதிமன்றம் வந்தவரிடம் 50 கிராம் கஞ்சா பறிமுதல்
/
நீதிமன்றம் வந்தவரிடம் 50 கிராம் கஞ்சா பறிமுதல்
ADDED : நவ 12, 2024 07:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:சென்னை காசிமேடு திடீர் நகர் பகுதியை சேர்ந்தவர் அகேஷ், 28. இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், நேற்று காலை கொலை வழக்கு தொடர்பாக, செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு அகேஷ் வந்தார். அப்போது, நீதிமன்ற வளாகத்தில் இருந்த போலீசார், அகேஷை சோதனை செய்த போது, அவரது பாக்கெட்டில் இருந்து, 50 கிராம் கஞ்சாவை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, அகேஷை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்ற போலீசார், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

