/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வீட்டின் கதவை உடைத்து 54 சவரன் நகை திருட்டு
/
வீட்டின் கதவை உடைத்து 54 சவரன் நகை திருட்டு
ADDED : பிப் 14, 2024 11:27 PM
எண்டத்துார்:அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், எல்.எண்டத்துார் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டுரங்கன், 60. இவர், சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல், தஞ்சாவூரில் உள்ள மகள் வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவரது மனைவி சரஸ்வதி, 53, வீட்டில் தனியாக உள்ளார். நேற்று முன்தினம் இரவு, சரஸ்வதி வீட்டை பூட்டிக் கொண்டு, அருகிலுள்ள தங்களது மற்றொரு வீட்டிற்கு உறங்க சென்றார்.
காலையில் வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 54 சவரன் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து, சரஸ்வதி அளித்த புகாரின்படி, உத்திரமேரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

