/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பழிக்குப்பழியாக ரவுடியை ஓட ஓட வெட்டிய 6 பேர் கைது
/
பழிக்குப்பழியாக ரவுடியை ஓட ஓட வெட்டிய 6 பேர் கைது
ADDED : ஜன 01, 2025 12:20 AM
அம்பத்துார், அம்பத்துார், முத்தமிழ் நகர் முதல் தெருவில், கொலை வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி லொட்ட நவீன், 24, என்பவர், ஆறு பேர் கும்பலால், நேற்று முன்தினம் இரவு, ஓட ஓட சரமாரியாக வெட்டப்பட்டார்.
அங்கிருந்தோர் அவரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து விசாரித்த அம்பத்துார் சரக உதவி கமிஷனர் தலைமையிலான போலீசார், நவீனை வெட்டி தப்பிய ராஜேஷ் குமார், 21, அசோக், 24, ஆல்பர்ட், 23, விஜய், 21, இமான், 20 மற்றும் ஏழுமலை, 21, ஆகியோரை, நேற்று மதியம் கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில், வெட்டுபட்ட நவீன், கடந்த 2021ம் ஆண்டு, ஐ.சி.எப்.,பில் கருணாகரன் என்பவர் கொலையிலும், 2024ம் ஆண்டு வில்லிவாக்கத்தில் உதயகுமார் என்பவரது கொலையிலும் பிரதான குற்றவாளியாவார்.
இந்நிலையில், அம்பத்துாரில் உள்ள தன்னுடைய மாமியார் வீட்டிற்கு வந்த போது, கருணாகரனின் ஆட்கள் காத்திருந்து, பழிக்குப்பழியாக வெட்டியது தெரிய வந்துள்ளது.
அம்பத்துார் போலீசார், ஆறு பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று இரவு சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

