/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஐ.டி., ஊழியர்களின் அறையில் 6 போன், லேப்டாப் திருட்டு
/
ஐ.டி., ஊழியர்களின் அறையில் 6 போன், லேப்டாப் திருட்டு
ஐ.டி., ஊழியர்களின் அறையில் 6 போன், லேப்டாப் திருட்டு
ஐ.டி., ஊழியர்களின் அறையில் 6 போன், லேப்டாப் திருட்டு
ADDED : ஆக 11, 2025 11:24 PM
சென்னை, சிட்லப்பாக்கத்தில், ஐ.டி., ஊழியர்கள் தங்கியிருந்த அறையில், ஆறு மொபைல் போன்கள், ஒரு மடிக்கணினி ஆகியவற்றை, மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
திருநெல்வேலியை சேர்ந்தவர் அக்ரம் மீரான், 25. சிட்லப்பாக்கம், பெரியார் தெருவில், நண்பர்கள் ஐந்து பேருடன் தங்கியுள்ளார்.
அந்த அறையில் உள்ள ஆறு பேரும் சிறுசேரி, சோழிங்கநல்லுார், மெப்ஸ் ஆகிய இடங்களில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.
கடந்த 9ம் தேதி இரவு, பணி முடிந்து அறைக்கு வந்த ஆறு பேரும், அறையில் படுத்து துாங்கினர்.
மறுநாள் அதிகாலை 5:00 மணிக்கு பார்த்த போது, அவர்களின் அருகில் ஆறு மொபைல் போன், மடிக்கணினி ஆகியவை இருந்துள்ளன.
காலை 8:00 மணிக்கு எழுந்து பார்த்த போது, அவை மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து, சிட்லப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகார் தொடர்பாக, போலீசார் வழக்கு பதிந்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.