/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
டாஸ்மாக் பார் ஊழியர்களை தாக்கிய 7 பேர் சிக்கினர்
/
டாஸ்மாக் பார் ஊழியர்களை தாக்கிய 7 பேர் சிக்கினர்
ADDED : ஜன 22, 2025 08:48 PM
திருப்போரூர்:மாம்பாக்கம் -- மேடவாக்கம் சாலை, பொன்மார் பகுதியில் உள்ள மதுக்கடையையொட்டி உணவகம் மற்றும் மதுக்கூடம் ஆகியவை உள்ளன.
நேற்று முன்தினம், இங்குள்ள மதுக்கூடத்திற்கு வந்த ஒரு கும்பல், கடை ஊழியர்களான பரேஷ்குமார் மொகந்தி, 37, உமேஷ் குமார் மல்கோத்ரா,30, ஆகிய இருவரையும் சரமாரியாக தாக்கி, கத்தியால் வெட்டி விட்டு தப்பினர்.
பலத்த காயமடைந்த இருவரையும், அங்கிருந்தோர் மீட்டு, ஆம்புலன்ஸ் வாயிலாக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இந்த தாக்குதல் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது.
இதுகுறித்து, தாழம்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சம்பவ இடத்திலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர்.
இதில், பதுவஞ்சேரியைச் சேர்ந்த அஜய், 19, சஞ்சய்,22, திண்டிவனத்தைச் சேர்ந்த ஹேமச்சந்திரன்,27, சித்தாலப்பாக்கத்தைச் சேர்ந்த ஸ்டீபன் குமார்,26, சேலையூரைச் சேர்ந்த அஜீத்,26, வெங்கம்பாக்கத்தைச் சேர்ந்த கங்காதரன்,27, வல்லரசு,25, ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது.
இவர்கள் ஏழு பேரையும் நேற்று கைது செய்து விசாரித்தனர்.
முதற்கட்ட விசாரணையில், முன்னதாக மதுக்கூடத்தில் சாப்பிட்ட உணவிற்கு பணம் செலுத்துவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக மேற்கண்ட கும்பல் மீண்டும் வந்து தாக்குதலில் ஈடுபட்டது தெரிந்தது.

